
ஆரோக்கியம் தனி மனிதனின் அடிப்படை உரிமை
ஆரோக்கியத்திற்கு அடிப்படையான உடலை இயக்கும் உயிராற்றல் சக்தி, நோயெதிர்ப்பு சக்தி, செல்களுக்கு தேவையான நீர்தாதுக்கள், பாரம்பரிய மூலிகை, ஆயுர்வேத நுண் ஊட்டச்சத்துணவு சிகிச்சைத் துறையில் பயிற்சிபெற்று, ஆலோசகராக, பயிற்ச்சியாளராக பெற்ற 12 ஆண்டு கால அனுபவத்தின் அடிப்படையிலும் மாற்று இயற்கை மருத்துவத்தில் சிறந்த வழிமுறைகளையும் ஒன்றினைத்து எவ்வித பக்க விளைவுமின்றி எளிய முறையில் அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது முப்பரிமாண சிகிச்சை முறை!
சன் லைஃப் ஹெல்த் சொல்யூசன் என்ற பெயரில் 2013 ஆண்டு துவங்கப்பட்டு, நாள்பட்ட தீராத உடல்வலிகள், சோர்வு, உறுப்புகள் செயலிழப்பு, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, இரத்தம் தொடர்பான நோய்கள், மூளைக்கட்டி முதல் கேன்சர் வரை, மருந்தில்லா நோய்களுக்கும் இம் முப்பரிமாண இயற்கை சிகிச்சை மூலம் பல பயனாளிகள் நிவாரணம் பெற்று அளித்த சான்றுகள் அடிப்படையில் வெற்றிகரமான 7ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு ஏழை எளிய நடுத்தர மக்களும் பயன் பெற வேண்டும் என்பதற்காக சன் லைஃப் அறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்திற்காக, தீராத நோய்களிலிருந்து விரைவில் நிவாரணம் பெற நீங்கள் செலவிடும் தொகையில் 50% மீண்டும் உங்களுக்கே திரும்ப செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது அனைவரும் பயன் பெற பெயரை முன்பதிவு செய்யவும்.
ஆரோக்கியம் என்பது உடல், மன நலம் மட்டுமல்ல பொருளாதாரத்தையும் சார்ந்தது எனும் உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி மக்களுக்கு ஆரோக்கியத்துடன் பொருளாதார மேம்பாட்டிற்கான வழிமுறைகளை கண்டறிந்து ஏழை, நடுத்தர மக்களுக்கு வருமானத்திற்கு வாய்ப்பளித்தல்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், குழந்தைகள், ஆதரவற்ற முதியோர்க்கு நல்ல ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் வழங்குவதோடு நோயினால் இறப்பு ஏற்படுவதை தவிர்க்க, உடல் மன நல ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி மக்களுக்கு இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய மருத்துவம் நவீன விஞ்ஞானத்தில் எவ்வாறு பயனளிக்கிறது என்பதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த உருவாக்கப்பட்டது சன் லைஃப் தொண்டு நிறுவனம்.
